அடுத்து 101 ரன் என்ற எளிய வெற்றி இலக்கை ேநாக்கி ஆஸ்திரேலிய மகளிர் அணி ஆட துவங்கியது. போபி லிச்பில்டு 35, எலிசா பெர்ரி 1, பெத் மூனி 1, அனபல் சுதர்லேன்ட் 6, ஆஷ்லிக் கார்டனர் 8 ரன்கள் எடுத்தனர். இறுதியில் ஆட்டமிழக்காமல் ஜார்ஜியா வோல் 46, கேப்டன் தகிலா மெக்ராத் 4 ரன்களில் இருக்க அந்த அணி 16.2 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக ரேணுகா தாக்கூர் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 2வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் டிச. 8ம் தேதி நடைபெறவுள்ளது.
The post இந்திய மகளிர் அணியுடன் முதல் ஓன்டே: ஆஸி. அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி appeared first on Dinakaran.