கூடலூர், டிச.5: கூடலூர் அருகே தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட புழம்பட்டி முதல் மச்சிக்கொல்லி வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட வாடகை வாகனங்களை இந்த சாலையில் இயக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் இப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பேரூராட்சி ஊழியர்கள் மூலம் பள்ளமான பகுதியில் கற்களை நிரப்பி தற்காலிகமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேடான பகுதியில் இதுபோன்று கற்களை போட்டு தற்காலிக பராமரிப்பு பணிகள் செய்தாலும் மீண்டும் பள்ளங்கள் ஏற்படும். எனவே பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் இந்த சாலையை அகலப்படுத்தி சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சாலையில் பேருந்து போக்குவரத்து சேவையை ஏற்படுத்தி பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பயன்பட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
The post கூடலூர் அருகே புழம்பட்டி மச்சிக்கொல்லி சாலையை விரைவாக சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.