கடந்த காலங்களில் மழை, வெள்ளத்தில் தவித்த சென்னையை மீட்டெடுத்திருப்பது போன்று, மற்ற பகுதிகளையும் விரைவாக மீட்டெடுப்போம். சென்னை மழை நின்ற அடுத்த நாளே மீண்டு இருக்கிறது. மழை நின்ற உடனே கொளத்தூர் தொகுதியைப் பார்வையிட்டப்போது, அங்கிருந்த ஒரு பெரியவர் சொன்னார். “முதல்முறையாக தில்லை நகர், வீனஸ் நகர், செந்தில் நகர் போன்ற இடங்களில் வெள்ளம் வரவில்லை. இந்த நகருக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது”-என்று சொன்னார். விடியலைத் தருவதுதான் உதயசூரியன். ஆனால், உதயசூரியன் என்றாலே கண்கள் கூசும் ஆட்களுக்கு விடியல் என்றால் தெரியாது. விடியவில்லை… விடியவில்லை… விடியா ஆட்சி என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளிய அந்த விடியா முகங்களுக்கு என்றைக்கும் விடியவே முடியாது. அது விடியவும் விடியாது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு முறை வடசென்னை பகுதிக்கு வரும்போது, வடசென்னை வளர்ச்சிக்கான திட்டங்களை செய்ய வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன். ஏன் என்றால், தென்சென்னைக்கே சென்றுக் கொண்டிருக்கிறோம். வடசென்னையை நாம் ஒரு அக்கறை எடுத்துக் கொண்டு அதன் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
என்னென்ன திட்டங்கள் இதில் எடுத்து கொள்ளப்படுகிறது என்றால், பாதுகாக்கப்பட்ட குடிநீர், சீராக கழிவுநீர் செல்வதற்கான அமைப்புகள், அனைத்துக் கழிவு நீரேற்ற நிலையங்களை மேம்படுத்துதல், போதிய மருத்துவ வசதி, தொழிற்கல்வி, திறன் மேம்பாடு, பகிர்ந்த பணியிடம், நூலகங்களை தரம் உயர்த்துதல், கல்வி மையம், பள்ளிக்கூட கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள், சீரான சாலைகள், பூங்காக்கள், மின்விளக்கு வசதிகள், துணை மின்நிலையங்கள், இதுமட்டுமல்ல, 40 ஆண்டுகளுக்கு மேலாக 200 சதுர அடி குடியிருப்பிலிருந்த அடித்தட்டு மக்களின் தேவையை உணர்ந்து, வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 400 சதுர அடிக்கு மேலாக மறுகட்டுமானம், புதிய குடியிருப்புகள் ஏற்படுத்துதல் என்று சென்னை மக்களின் தேவைகள் என்னென்ன என்று பார்த்து பார்த்து திட்டங்களை இன்றைக்கு உருவாக்கியிருக்கிறோம்.
இந்த சென்னைக்காக திமுக செய்த திட்டங்களை சிலவற்றை மட்டும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அண்ணா மேம்பாலம், கத்திபாரா பாலம், கோயம்பேடு பாலம், பாடி பாலம், மீனம்பாக்கம் பாலம், மூலக்கடை பாலம், மேற்கு அண்ணாநகர் பாலம், வியாசர்பாடி பாலம், பீட்டர்ஸ்ரோடு வெஸ்கார்டுசாலை மேம்பாலம், பீட்டர்ஸ்ரோடு கான்ரான்ஸ்மித் சாலை மேம்பாலம், சர்தார்படேல் சாலை, காந்திமண்டபம் சாலை மேம்பாலம், டி.டி.கே. சாலை – ஆர்.கே. சாலை மேம்பாலம், டவுட்டன் சந்திப்பு மேம்பாலம், பாந்தியன் சாலை- காசா மேஜர் சாலை மேம்பாலம், டிடிகே சாலை – சி.பி. இராமசாமி சாலை மேம்பாலம், சர்தார் பட்டேல் சாலை – எல்.பி.சாலை மேம்பாலம், எம்.கே.பி. நகர் மேம்பாலம், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பாலம், தங்கசாலை மணிகூண்டு பாலம், ஆர்.கே நகர் காக்ரேன் பேசின் பாலம், ஜி.கே.மூப்பனார் மேம்பாலம், ரங்கராஜபுரம் மேம்பாலம், உஸ்மான் ரோடு மேம்பாலம், கோடம்பாக்கம் பாலம், ஆலந்தூர் மிசா ஆபிரகாம் பாலம், கோபதி நாராயண சாலை மேம்பாலம், மேத்தா நகர் மேம்பாலம், இந்திரா நகர் பாலம், மேயர் சிட்டிபாபு மேம்பாலம் – இன்னும் நிறைய இருக்கிறது, அவ்வளவு இருக்கிறது.
அதுமட்டுமல்ல, செம்மொழிப்பூங்கா, தொல்காப்பிய பூங்கா, கலைஞர் நூற்றாண்டு பூங்கா, ஏராளமான சாலையோரப் பூங்காக்கள், கோயம்பேடு காய்கறி அங்காடி, கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில், தலைமைச் செயலகமாக கட்டப்பட்டு, இன்றைக்கு பெரிய அரசு மருத்துவமனையாக இருக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை கட்டடம், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, ஓ.எம்.ஆர்.-ல் ஐ.டி. காரிடார், டைட்டல் பார்க், நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் என்று இன்னும் மிகப்பெரிய பட்டியலே போட முடியும். அதனால் தான் சென்னை எப்போதும் திமுகவின் கோட்டையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
சென்னையை எப்படி கடந்த காலங்களில் வளர்த்தெடுத்தோமோ, அதேபோன்று, இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த திட்டங்கள் மூலமாக எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி, சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம். வந்தாரை வாழவைக்கும் சென்னை, மெரினாவில் உதிக்கும் உதயசூரியனின் ஒளியிலும், திராவிட மாடல் ஆட்சியின் ஒளியிலும் – ஒளிரும், ஒளிரும், ஒளிரும், ஒளிர்ந்துக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி சிங்கார சென்னையை கட்டி எழுப்புவோம்: ரூ.1383 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.