இந்த வழக்கில் மேத்யூ சாமுவேல் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தவறான, அவதூறு பரப்பும் கருத்துகளை கூறியிருப்பதாகவும், அதனை நீக்க வேண்டுமெனவும் எடப்பாடி பழனிசாமி சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜெ.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், குற்ற வழக்கில் முதல் தகவல் அறிக்கையிலும், புலன் விசாரணையிலும் மனுதாரருக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில், உள்நோக்கத்துடன் மேத்யூ சாமுவேல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில் மனுவில் தேவையில்லாத அவதூறு பரப்பும் வகையில் உள்நோக்கத்துடன் தெரிவிக்கும் விஷயங்களை கூறியிருக்கிறார். இது மனுதாரர் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து, பதில் மனுவை பரிசீலித்த நீதிபதி, பதில் மனுவில் கூறியுள்ள தேவையற்ற விஷயங்களை நீக்கி புதிய மனுவை தாக்கல் செய்யலாம். பதில் மனுவில் கூறியுள்ள தேவையற்ற கருத்துகளை திரும்பப் பெறுவது தொடர்பாக மேத்யூ சாமுவேல் கருத்தை பெற்று தெரிவிக்குமாறு அவரது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post இபிஎஸ் தொடர்ந்த மானநஷ்ட வழக்கு பதில் மனுவில் கூறியுள்ள தேவையற்ற கருத்துகளை திரும்பப்பெற முடியுமா? மேத்யூ சாமுவேல் தரப்பு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.