வங்கதேசம்-வெ.இண்டீஸ் டெஸ்ட் தொடர் டிரா


ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ் – வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தது. வெஸ்ட் இண்டிஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட், 3 ஒன்டே, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 2 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்க இரண்டாவது டெஸ்ட் ஜமைக்கா செயிண்ட் பார்க் ஸ்டேடியத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 164 ரன்கள், வெஸ்ட் இண்டீஸ் 146 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகின. இரண்டாவது இன்னிங்சில் 18 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய வங்க தேசம் அணி 268 ரன்கள் ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜாகீர் அலி 91 ரன்கள் எடுத்தார்.

இதை தொடர்ந்து 287 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 185 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிகபட்சமாக வெஸ்ட் இண்டிசில் கெவம் ஹோட்ஜ் 55 ரன்கள் அடித்தார். வங்கதேச அணி தரப்பில் தஜூல் இஸ்லாம் 5 விக்கெட், ஹசன் முகமது, டஸ்கின் முகமது தலா 2 விக்கெட், ஹசன் மிராஸ் 1 விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகனாக தஜூல் இஸ்லாம், ெதாடர் நாயகன்களாக டஸ்கின் அகமது, ஜெய்டன் சீல்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. அடுத்து இரு அணிகளும் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் டிச. 8ல் துவங்குகிறது.

The post வங்கதேசம்-வெ.இண்டீஸ் டெஸ்ட் தொடர் டிரா appeared first on Dinakaran.

Related Stories: