மற்றொரு வீரர் கார்த்திகேயா 49 பந்தில் 57 ரன் எடுத்தார். 50 ஓவர் முடிவில் இந்தியா, 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் குவித்தது. ஜப்பானின் கீபெர் யமமோட்டோ லகே 2, ஹியுகோ கெல்லி 2, சார்லஸ் ஹின்ஸே, ஆரவ் திவாரி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஜப்பானின் துவக்க வீரராக களமிறங்கிய ஹியுகோ கெல்லி நிதானமாக ஆடி 111 பந்துகளில் 50 ரன் எடுத்து அவுட்டானார். சார்லஸ் ஹின்ஸே 68 பந்தில் 35 ரன் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 50 ஓவர் இறுதியில் ஜப்பான் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், 211 ரன் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக இந்திய அணி கேப்டன் முகம்மது அமான் அறிவிக்கப்பட்டார்.
The post பாடி ஸ்ட்ராங்கு… பேஸ்மென்ட் வீக்கு… 128 ரன்னில் பதுங்கிய ஜப்பான் இமாலய வெற்றி பெற்ற இந்தியா: அண்டர் 19 ஒரு நாள் கிரிக்கெட் appeared first on Dinakaran.