சென்னை: கொலை வழக்கு ஒன்றில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு மரண தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இந்த தண்டனையை உறுதி செய்தன. இதனையடுத்து, ராதாகிருஷ்ணன் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இதனை பரிசீலித்த குடியரசு தலைவர், ராதாகிருஷ்ணனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சாகும்வரை சிறையில் இருக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராதாகிருஷ்ணன் ஆளுநரிடம் மனு அளித்தார். அந்த மனு பரிசீலிக்கப்படாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. கருணை மனு மீது குடியரசு தலைவர் ஏற்கனவே முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்த நிலையில், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post கருணை மனு மீது ஜனாதிபதி முடிவெடுத்துவிட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது: மரண தண்டனை கைதி வழக்கில் ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.