இராமநதி அணையிலிருந்து 117 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

சென்னை: தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், இராமநதி பாசனம், வடகால், தென்கால், பாப்பான்கால் மற்றும் புதுக்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுக பாசனம் 4943.51 ஏக்கர் நிலங்களுக்கு 1434-ம் பசலி பிசான சாகுபடி செய்வதற்கு 05.12.2024 முதல் 31.03.2025 வரை 117 நாட்களுக்கு வினாடிக்கு 60 க.அடி மிகாமல், பாசன பருவ காலத்திற்கு தேவைப்படும் மொத்த தண்ணீர் அளவான 823.92 மி.க.அடிக்கு மிகாமல் இராமநதி நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரின் அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர் வரத்தினை கருத்தில் கொண்டு, இராமநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், வடகால், தென்கால், பாப்பன்கால், மற்றும் புதுக்கால் ஆகியவைகளிலுள்ள குளங்களின் பாசன நிலங்கள் மற்றும் நேரடி பாசன நிலங்களில் உள்ள 4943.51 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

The post இராமநதி அணையிலிருந்து 117 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.

Related Stories: