காவல் துறைக்கு சொந்தமான கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

திருச்சி, டிச.3: திருச்சி மாவட்ட போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் வரும் டிச.10ம் தேதி ஏலம் விடப்படவுள்ளதாக எஸ்பி வருண்குமார் ெதரிவித்துள்ளார். இதுகுறித்து எஸ்பி வருண்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருச்சி மாவட்ட போலீஸ் துறையில் பயன்படுத்தபட்டு கழிவு செய்யப்பட்ட ஒரு கார், 13 டூவீலர்கள் என மொத்தம் 14 வாகனங்கள் தற்போதுள்ள நிலையிலேயே, பதிவுச்சான்றிதழ் ரத்து செய்து (RC Surrender), பொது ஏலம் விடப்படுவுள்ளது. இதற்கான ஏலம் டிச.10 அன்று காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும்.

ஏலம் எடுக்க விரும்பம் உள்ளவர்கள், டிச.9ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர். ஏலம் நடைபெறும் நாளான டிச.10ம்தேதி காலை 8 முதல் 10 மணி வரை தங்கள் ஆதார் அட்டையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ₹5 ஆயிரமும், டூவீலருக்கு ₹2 ஆயிரமும் முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகையுைடன் நான்கு சக்கர வாகனத்திற்கு 18%, டூவீலர்களுக்கு 12% ஜிஎஸ்டியும் சேர்த்து செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என எஸ்பி வருண்குமார் தெரிவித்துள்ளார்.

The post காவல் துறைக்கு சொந்தமான கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: