அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த லாரியை சோதனை செய்த போது மிளகாய் மூட்டைகளுக்கு இடையே 396 பொட்டலங்கள் கொண்ட உயர்ரக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது, உடனே லாரியில் கடத்தி வந்த 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் லாரியில் மறைத்து வைத்திருந்த 396 பொட்டலங்களில் மொத்தம் 848 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4.25 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கொள்முதல் செய்து அதை விஜயவாடா அருகில் உள்ள ஹாசா டோல்பிளாசா அருகில் இருந்து லாரி மூலம் யாருக்கும் தெரியாத வகையில் மிளகாய் மூட்டைகளில் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதன் பின்னனியில் சென்னை ஏஜெண்ட்டுகள் மற்றும் விஜயவாடாவில் இருந்து கஞ்சாவை அனுப்பியது யார் என்று ஒன்றிய போதை தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு மிளகாய் மூட்டையில் மறைத்து கடத்திய ரூ.4.25 கோடி உயர் ரக கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது appeared first on Dinakaran.