தந்தையே குழந்தையை அடித்து சித்ரவதை: வீடியோ வைரல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மேட்டுத்தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் கார்த்திகேயன் (34). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஜஸ்வந்தி என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நாளடைவில் கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், கார்த்திக் செங்கல்பட்டிலும் அவரது மனைவி தனது குழந்தையுடன் வந்தாவாசியிலும் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் தனது குழந்தையை செங்கல்பட்டில் தனது கணவர் அம்மா வீட்டில் விட்டு விட்டு கார்த்திக்கின் மனைவி மீண்டும் வந்தவாசி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, கார்த்திக் தனது இரண்டரை வயது மகளை அடிப்பது, தலையில் தட்டுவது அறைவது மற்றும் கழுத்தை நெறித்து கொள்ள முயற்சிப்பது போன்ற கொடூர செயல்களை செய்யும் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பெற்ற தந்தையே தனது இரண்டரை வயது மகளை அடித்து உதைத்து சித்ரவதை செய்யும் தகவல் செங்கல்பட்டு குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் உதவியோடு சம்மந்தப்பட்ட வீட்டுக்கு நேற்று காலை சென்று அந்த சிறுமியை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு குழந்தைகள் நல குழும ஒருங்கிணைப்பாளர் சங்கமித்ரா புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு நகர போலீசார் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை அறிந்த குழந்தையின் தந்தை தலைமறைவாகி விட்டார். போலீசார் விசாரித்து தேடி வருகின்றனர்.

The post தந்தையே குழந்தையை அடித்து சித்ரவதை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: