டெல்லி: கீழடியில் 10 அடி குழி தோண்ட அனுமதிக்காத ஒன்றிய அரசு, தொல்லியல் சின்னங்கள் நிறைந்த அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க அனுமதிப்பது தமிழ்நாட்டின் வரலாற்றையும், வளத்தையும் அழிக்கும் முயற்சி என மக்களவையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.