பெரம்பூர்: அயனாவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் கிளப்பை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு பலர் பணம் வைத்து சீட்டு கட்டுகளுடன் சூதாடுவது தெரிய வந்தது. அங்கு, அதிரடியாக நுழைந்த போலீசார் 18 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அங்கிருந்து 29 டோக்கன்கள் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் வைத்து சூதாடிய அந்த கிளப்பின் உரிமையாளர் தினேஷ்குமார் (41), இந்திரகுமார் (65), ராஜி (55), பிரபாகரன் (54), பிரகாஷ் (33) உட்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post பணம் வைத்து சூதாட்டம் கிளப் உரிமையாளர் உள்பட 18 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.