சிகிச்சைக்கு வந்த மூதாட்டி உயிரிழப்பு ஸ்டான்லி மருத்துவமனை சூறை; உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்: மகன் உள்பட 4 பேர் கைது

தண்டையார்பேட்டை: சிகிச்சைக்கு வந்த மூதாட்டி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த மகன் மற்றும் உறவினர்கள் ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்களிடம் தகராறு செய்து மருத்துவமனையை சூறையாடினர். தடுக்க வந்த எஸ்.ஐ.,யை தாக்கிய மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பிலோமினா (75), இவருக்கு மூச்சிரைப்பு நோய் காரணமாக கடந்த 30ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் அந்தோணிராஜ் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர், அங்கிருந்த கண்ணாடி கதவை உடைத்து உள்ளனர்.

இதை அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் அசோக் குமார் தடுத்துள்ளார். அவரையும் தாக்கி உள்ளனர். புகாரின் அடிப்படையில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் (42), பிரான்சிஸ் (35), திலீப்குமார் (19), கிஷோர் (21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post சிகிச்சைக்கு வந்த மூதாட்டி உயிரிழப்பு ஸ்டான்லி மருத்துவமனை சூறை; உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்: மகன் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: