இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரி செய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்தியுள்ள கடும் பாதிப்புகளைப் பார்வையிட்டு, மக்களுக்கு உதவிட விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொண்டிருக்கிறேன். கடலூர் மாவட்டத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களைத் தொடர்புகொண்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினேன்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை அமைச்சர் எ.வ.வேலு அவர்களிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு சு. முத்துசாமி அவர்களையும், தருமபுரி மாவட்டத்துக்கு சேலம் ராஜேந்திரன்  அவர்களையும் நியமித்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன். இம்மாவட்டங்களின் ஆட்சியர்களுடனும் தொடர்ந்து பேசிக் கள நிலவரத்தைக் கண்காணித்து வருகிறேன். இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரிசெய்து இயல்புநிலையை மீட்டெடுப்போம்!,”இவ்வாறு தெரிவித்தார்.

The post இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரி செய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: