கணேசபுரம் சுரங்கப் பாதையில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 32 முகாம்கள் அமைக்கப்பட்டு 1018 நபர்கள் தங்க வைக்கப்பட்டு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. 9,10,000 உணவு பொட்டலங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 386 அம்மா உணவகத்தில் 1 லட்சத்திற்கும் மேலான உணவு வழங்கப்பட்டுள்ளது. எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் இருந்து வருகிறது. கொளத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை என மக்களே தெரிவித்தார்கள். வரலாறு காணாத அளவில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை பெய்துள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி , சிவசங்கர், எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் களத்தில் உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைந்து இருக்கிறார்.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட 12 குழுக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 26 முகாம்களில் 1373 நபர்கள் தங்கள் வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ள பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்கிடவும் , பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள குழுவை அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. முடிந்த பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் பயிர் சேதம் கணக்கிடப்பட்டு அதற்கு பிறகு மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம். புயல் சேதங்கள் குறித்து ஒன்றிய அரசிடம் நிதி கோருவது குறித்து நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்று கூறியுள்ளார்.
The post விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி! appeared first on Dinakaran.