திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று பாறை சரிந்து விழுந்த இடத்தில் இருந்து அரை கி.மீட்டர் தொலைவில் மேலும் ஒரு ராட்சத பாறை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வீடுகள் மீது பாறை சரிந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது மற்றொரு இடத்திலும் விபத்து ஏற்பட்டுள்ளது.