வேலூர்: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவத்தேர்வுகளில் நடைபெறுவதாக இருந்த தேர்வு மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் அமைந்துள்ள வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 81 கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளை சேர்ந்த இளநிலை, முதுநிலை மாணவர்கள் ஏறத்தாழ 80 ஆயிரம் பேர் நவம்பர் மற்றும் டிசம்பர் 2024 பருவத்தேர்வுகளை எதிர்கொண்டுள்ளனர்.
இதில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தேர்வு மட்டும் தொடர் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு எப்போது நடைபெறும் என்று பின்னர் அறிவிக்கப்படும். அதேநேரத்தில் அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெற உள்ள தேர்வுகள் அட்டவணைப்படி நடைபெறும் என்று பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாபு தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் சூழப்பட்ட 1000 பேருக்கு உணவு பொட்டலங்கள் வருவாய்த்துறையினர் வழங்கினர்
The post திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவத்தேர்வு ஒத்தி வைப்பு: தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் தகவல் appeared first on Dinakaran.