அவுட்சோர்சிங் மூலம் நடத்த பிஎஸ்என்எல் நடவடிக்கை தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு அழைப்பு வாடிக்கையாளர் சேவை மைய செயல்பாடு

வேலூர், நவ.29: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கான அவுட்சோர்சிங் உரிமம் பெறுவதற்கான வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பிஎஸ்என்எல் வட்டத்தில், வேலூர் வர்த்தக பகுதிக்குட்பட்ட ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பேர்ணாம்பட்டு, சோளிங்கர், அரக்கோணம், ஆரணி, செங்கம், போளூர், திருவத்திபுரம், ஆம்பூர், ஆற்காடு, காட்பாடி, வந்தவாசி, சத்துவாச்சாரி மற்றும் பாகாயத்தில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கான அவுட்சோர்சிங் நேரடி உரிமம் பெறுவதற்கு தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்கள் வரும் 16ம் தேதி வரை வரவேற்கப்படுகிறது. இதுதொடர்பான விபரங்களை www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற இணையதள முகவரியில் காணலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அவுட்சோர்சிங் மூலம் நடத்த பிஎஸ்என்எல் நடவடிக்கை தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு அழைப்பு வாடிக்கையாளர் சேவை மைய செயல்பாடு appeared first on Dinakaran.

Related Stories: