பள்ளிகொண்டா அருகே 14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள் போக்சோவில் கைது

வேலூர், நவ. 21: பள்ளிகொண்டா அருகே 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 16ம்தேதி நள்ளிரவு இயற்கை உபாதை கழிக்க வீட்டின் அருகே உள்ள மறைவான இடத்துக்கு சென்றார். அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த இளமதன்குமார்(28), சின்னராசு(30), வீரப்பன்(28) ஆகியோர் சிறுமியை அருகே உள்ள கல்குவாரிக்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை, வேலூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்றுமுன்தினம் இரவு புகார் அளித்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் எஸ்பி தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த இளமதன்குமார், சின்னராசு, வீரப்பன் ஆகிய 3 பேரையும் பிடித்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் வேலூர் கோர்ட்டில் ஆஜரப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post பள்ளிகொண்டா அருகே 14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: