லக்னோ: சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மகளிர் ஒன்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, சகநாட்டு வீராங்கனை அன்மோல்கார்பை வீழ்த்தினார். நேற்று மதியம் நடந்த 2வது சுற்றில், சகநாட்டு வீராங்கனை சர்மாவுடன் பி.வி.சிந்து மோதினார். அதில், 21-10, 12-21, 21-15 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இன்று (29ம் தேதி) மதியம் 1.40 மணிக்கு நடக்கும் காலிறுதியில் பி.வி.சிந்து, சீனா வீராங்கனை டையுடன் மோதுகிறார். மற்ற காலிறுதிகளில் இந்திய வீராங்கனைகள் ஹூடா, மிர், வாலிசெட்டி ஆகியோர் சீனா, தாய்லாந்து வீராங்கனைகளுடன் மோதுகின்றனர்.
The post சையத் மோடி பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம் appeared first on Dinakaran.