அமலாக்கத்துறை வழக்கில் எவ்வளவு காலம் சிறையில் வைப்பீர்கள்: உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக அப்போது அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி கைது 2022 ஜூலை 23ல் செய்யப்பட்டார். இந்தவழக்கில் ஜாமீன்கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு அமலாக்கத்துறையிடம் சரமாரி கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில்,’ முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்னும் தொடங்கவில்லை.

அவருக்கு ஜாமீன் வழங்காவிட்டால் என்ன நடக்கும்? வழக்குகளில் 183 சாட்சிகள் உள்ளனர். விசாரணைக்கு எவ்வளவு நேரம் எடுக்கும். எவ்வளவு காலம் அவரை சிறையில் வைத்திருக்க முடியும்? அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இறுதியில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படாவிட்டால், என்ன நடக்கும்? இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் சிறையில் இருப்பது ஒரு சிறிய காலம் அல்ல. ஈடிவழக்குகளில் தண்டனை விகிதம் 60 முதல் 70 சதவிகிதமாக இருந்தால் கூட பரவாயில்லை. அது மிகவும் மோசமாக உள்ளது’ என்று விமர்சனம் செய்தனர்.

The post அமலாக்கத்துறை வழக்கில் எவ்வளவு காலம் சிறையில் வைப்பீர்கள்: உச்ச நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: