தமிழகத்தை நெருங்கும் ‘பெங்கல்’ புயல்: கனமழை எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (புதன்கிழமை) புயலாக வலுவடைகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று உருவாக இருக்கும் புயலுக்கு ‘பெங்கல்’ என்று பெயரிடப்பட உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில், கனமழை, புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடலூர், மயிலாடுதுறை , நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தை நெருங்கும் ‘பெங்கல்’ புயல்: கனமழை எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: