புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது. கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க அரக்கோணத்திலிருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காரைக்கால் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். பின்னர் மாவட்ட ஆட்சியருடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தாழ்வான பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்களை உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட உள்ளனர். மேலும் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்து வருவதால் நாளை (27.11.2024) அனைத்து அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
The post கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (27.11.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.