‘பெங்கல்’ என்ற பெயரை சவுதி அரேபியா பரிந்துரை செய்துள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும், சென்னை – புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்! appeared first on Dinakaran.