அதில் டெண்டர் எடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்த சண்முகம் மற்றும் தனியார் நிறுவனத்தின் மேலாளர் சேகர் ஆகியோர் மூலம் சட்டவிரோதமாக இணை இயக்குநராக இருந்த புகழேந்திக்கு பணம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து இணை இயக்குநராக இருந்த புகழேந்தி துறைமுகம் நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதே நேரம் இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி சிபிஐ தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் துறைமுகத்தில் பல ஆண்டுகளாக கழிவு செய்யப்பட்ட இயந்திர உதிரிபாகங்களை டெண்டர் விட்டது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் மயிலாப்பூரில் உள்ள முன்னாள் துறைமுகம் இணை இயக்குநர் புகழேந்தி வீடு, டெண்டர் எடுத்த அயப்பாக்கத்தில் உள்ள சண்முகம் வீடு, தனியார் நிறுவனத்தின் மேலாளராக உள்ள ராயப்பேட்டை அம்மையப்பன் தெருவை சேர்ந்த சேகர் என்பவர் வீடு என 3 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், டெண்டர் விடப்பட்ட ஆவணங்கள், அதற்கான பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி தொடர்பான விவரங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post உதிரிபாகங்கள் டெண்டர் விட்ட விவகாரம் துறைமுக மாஜி இணை இயக்குநர் உள்பட 3 பேர் வீடுகளில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.