மேலிருந்து கீழாக இறங்குவதற்கு தந்திரி, மேல்சாந்தி மற்றும் பந்தளம் மன்னரின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி உள்ளது. அதுவும் மேலிருந்து கீழாக பின்புறமாக மட்டுமே அவர்கள் இறங்குவார்கள். ஐயப்பனுக்கு யாரும் பின்புறத்தைக் காட்டி நிற்கக்கூடாது என்ற மரபும் சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மிகவும் புனிதமாக கருதும் 18ம் படியில் பக்தர்களை கைபிடித்து ஏற்றுவதற்காக போலீசார் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் படிகளில் உட்காரவோ, பின்புறத்தைக் காட்டி நிற்கவோ கூடாது.
சபரிமலையில் பணிக்கு வரும் போலீசார் 12 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவது வழக்கம். இதன்படி கடந்த 14ம் தேதி பணிக்கு வந்த போலீசாரின் பணி 25ம் தேதியுடன் (நேற்று முன்தினம்) நிறைவடைந்தது. இதில் 18ம் படியில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த போலீசாரும் பணிமுடிந்து திரும்பினர். அப்போது மதியம் நடை சாத்தப்பட்டிருந்த நேரத்தில் இவர்கள் அனைவரும் 18ம் படியில் அமர்ந்து குரூப் போட்டோ எடுத்தனர்.
இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. போலீசாரின் இந்த செயலுக்கு விசுவ இந்து பரிஷத், கோயில்கள் பாதுகாப்பு அமைப்பு, இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சபரிமலையில் ஆச்சார விதிகளை மீறிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சன்னிதானம் எஸ்பி பைஜுவுக்கு ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டுள்ளார். மேலும் சபரிமலை பணி முடிந்து விடுமுறையில் சென்ற இந்த போலீசார் அனைவரையும் உடனடியாக பணிக்கு ஆஜராக ஏடிஜிபி ஸ்ரீஜித் உத்தரவிட்டுள்ளார்.
The post சபரிமலையில் புதிய சர்ச்சை 18ம் படி மீது அமர்ந்து போலீசார் குரூப் போட்டோ: விசாரணை நடத்த உத்தரவு appeared first on Dinakaran.