மாநிலங்களுக்கு பேரிடர் தடுப்பு, மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1,115கோடி ஒதுக்கீடு


புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘15 மாநிலங்களில் பல்வேறு பேரிடர் தடுப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.1000 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் திறனை வளர்ப்பதற்கான மற்றொரு திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.115.67 கோடி செலவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்டிற்கு தலா ரூ.139கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா ரூ.100 கோடி, கர்நாடகா, கேரளாவிற்கு தலா ரூ.72 கோடி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலத்துக்கு தலா ரூ.50கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7 நகரங்களில் நகர்ப்புற வெள்ள அபாய குறைப்பு திட்டங்களுக்கு மொத்தம் ரூ.3075 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மாநிலங்களுக்கு பேரிடர் தடுப்பு, மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1,115கோடி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: