சென்னை: இன்று முதல் நவ.30 வரை நாகை முதல் திருவள்ளூர் வரை கடலில் அதிக உயரத்தில் அலைகள் உருவாகும் என மக்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்கரையில் 9-12 அடி உயரத்திற்கு அலைகள் உருவாகலாம். பொதுமக்கள் கடலுக்கு அருகாமையில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.