இன்று (26.11.2024) காலை வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற “காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்” சென்னை பெருநகர காவல், நுண்ணறிவுப்பிரிவு (I.S.) மற்றும் பாதுகாப்பு சென்னை காவல் (SCP) பிரிவுகளில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 38 குறைதீர் மனுக்களை பெற்றார்.
இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணிமாறுதல், தண்டனை இரத்து செய்தல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட 38 மனுக்களை பெற்று. இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இம்முகாமில், சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) கபில்குமார் சி சரட்கர், காவல் இணை ஆணையாளர்கள் G.தர்மராஜன், (நுண்ணறிவுப்பிரிவு) A.கயல்விழி இகாட்ட (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் சுஜித்குமார். (பாதுகாப்பு சென்னை காவல்), K.அதிவீரபாண்டியன் (நிர்வாகம்). M.ராமமூர்த்தி (நுண்ணறிவுப்பிரிவு), S.மேகலீனா ஐடன் (தலைமையிடம்). ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்; ஆளிநர்களிடமிருந்து மனுக்களை பெற்றார் காவல் ஆணையாளர் A.அருண் appeared first on Dinakaran.