தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 960 ரூபாய் சரிந்து 56,640 ரூபாய்க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 960 ரூபாய் சரிந்து 56,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,760 குறைந்துள்ளது. கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 7,080 ரூபாய்க்கு ஆபரணத் தங்கம் விற்பனையாகிறது; சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.98க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும், மக்கள் தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் ஏற்பட்ட விலை சரிவு, நகை வாங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. கடந்த காலங்களில் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போதைய சரிவு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. இந்தநிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.

அந்த வகையில் கிராமுக்கு 100 ரூபாய் தங்கத்தின் விலை குறைந்து 7200 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் 7080 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது. அதன் படி ஒரு சவரன் 56ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு 1760 ரூபாய் குறைந்துள்ளதால் நடத்தர வர்க்க மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

The post தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்..! சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 960 ரூபாய் சரிந்து 56,640 ரூபாய்க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: