கொடைக்கானல், நவ. 26: 0கொடைக்கானலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு அகற்றத்தை மீண்டும் தொடர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானல் நகர் பகுதியில் வார- தொடர் விடுமுறை மற்றும் ேகாடை சீசன் நேரங்களில் ஏற்படும் வாகன நெரிசலை குறைப்பதற்கும், சுற்றுலா பயணிகள் எளிதில் வந்து செல்வதற்கும் ஏற்ற வகையிலும் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. அப்போது கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான சாலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து ஏரி சாலை வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இவ்வாறு ஒரு சில நாட்கள் மட்டுமே இந்த ஆக்கிரப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன்பின் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஒரு சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் விடுபட்டு உள்ளது. குறிப்பாக கொடைக்கானல் சீனிவாசபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி, ஏரி சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து எடுக்கப்படாமல் உள்ளன. இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுபட்ட பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றம் மீண்டும் தொடருமா? appeared first on Dinakaran.