திருவெறும்பூர், நவ.28: ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய கானா பாடல் பாடி சமூக வலைதளங்களில் பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிசத் சார்பில் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் இந்து கடவுளுக்காக மட்டுமல்லாமல் பல்வேறு மதத்தினரும் போற்றும் வகையில் உள்ளது. இந்த ஐயப்பனுக்கு கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து வழிபாடு செய்து வருகின்றனர். இப்படி பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கு ஒருசில வரைமுறைகள் வருக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கானா பாடல் பாடும் இசைவாணி சர்ச்சைக்குரிய வரிகளில் ஐயப்பன் குறித்து பாடல்களை பாடி சமூக வலைத்தளத்தில் பரப்பி உள்ளதாக தெரிகிறது. இது ஐயப்ப பக்தர்களிடையே மன உளைச்சலையும் வேதனையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறி திருச்சி மாநகர காட்டூர் விஸ்வ ஹிந்து பரிஷத் பிரகண்ட தலைவர் விஜயராமன் தலைமையில் மாவட்ட இணை செயலாளர் யுவராஜ், பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன், நகர் மண்டல் தலைவர் ராம்கி, விஸ்வ இந்து பரிசத் பிரகண்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் பாஜக சுவாமிநாதன் ஆகியோர் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தனர்.
The post ஐயப்பன் குறித்து சர்ச்சை பாடல்: நடவடிக்கை கோரி போலீசில் புகார் appeared first on Dinakaran.