இதற்கான காசோலையை, அப்போலோ மருத்துவமனை குழந்தைகள் இதய சிகிச்சை பிரிவின் துறைத் தலைவர் டாக்டர் முத்துகுமரனிடம் சன் டி.வி. குழுமம் சார்பில் மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர். அப்போது குழந்தைகள் இதய அறுவை சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் நிவில் சாலமன், சென்னை மண்டல மருத்துவ சேவை இயக்குநர் டாக்டர் வெங்கடாசலம், குழந்தைகள் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சரண்யா அமல், மருத்துவமனை நிர்வாகிகள் நிரஞ்சனி, ராஜ்குமார் உடனிருந்தனர்.
“இந்த நிதியின் மூலம் தமிழ்நாடு, ஆந்திராவைச் சேர்ந்த 80 ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று குழந்தைகள் இதய சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார். ஏழை எளியோருக்கு கல்வி, அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சன் டி.வி.யும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post 80 ஏழைக் குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்ய சன் டி.வி. ரூ.1 கோடி நிதியுதவி appeared first on Dinakaran.