கோத்தகிரி பகுதியில் நீர்பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோத்தகிரி : கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் நேரங்களில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நீர்பனிப்பொழிவு தொடங்கியது. இதனால் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நகர்புற பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. கடும் குளிர் நிலவுவதோடு மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது.

மேலும் உதகை, குன்னூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதை நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பனிமூட்டம் காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகள் எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கி செல்கின்றனர். காலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் குளிரில் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

The post கோத்தகிரி பகுதியில் நீர்பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: