விசாகப்பட்டினத்தில் தென் கடற்கரை ரயில்வே (எஸ்சிஓஆர்) மண்டலத்தின் தலைமையகம் அமைக்கப்படும் என ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஆனால் நில எடுப்பு பிரச்சனையால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தான் , புவனேஸ்வரில் உள்ள கிழக்கு கடற்கரை ரயில்வே (ECoR) தலைமையகம் விசாகப்பட்டினத்தில் பொது மேலாளர் அலுவலக வளாகம் மற்றும் பிற தொடர்புடைய பணிகளுக்கான டெண்டரை கோரியுள்ளது. டெண்டர்களுக்கான இறுதித் தேதி டிசம்பர் 27, 2024. ஏலத்திற்கு முந்தைய மாநாடு டிசம்பர் 2, 2024 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும், ஏலம் டிசம்பர் 13, 2024 அன்று தொடங்கும்.
இதனை தனது எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி உறுதி செய்துள்ளார். இதனிடையே விசாகப்பட்டினத்தில் புதிதாக அமைய உள்ள ரயில்வே மண்டல பகுதியில், என்எஸ்டிஎல், பிஎச்இஎல், பிஏஆர்சி, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளிட்ட நிறுவனங்கள் பல உள்ளதால் வரும் காலத்தில் இப்பகுதி அதிகப்படியான வளர்ச்சியை நோக்கி முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
The post விசாகப்பட்டினத்தில் தென் கடற்கரை ரயில்வே மண்டலத்தின் தலைமையகத்தை அமைக்க டெண்டர் கோரப்பட்டது : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.