பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு பிப்ரவரிக்குள் கொள்கை ஒப்புதல்..!!

காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு பிப்ரவரி மாதத்திற்குள் கொள்கை அளவிலான ஒப்புதல் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தின் இடம் நெருக்கடிக்கு தீர்வாகவும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் விதமாகவும் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. ரூ.29,144 கோடி மதிப்பீட்டில் 5476 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசின் தொழிற்வளர்ச்சித்துறை கழகமான டிட்கோ செயல்படுத்துகிறது. கடந்த ஜூலை மாதம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான அனுமதியை ஒன்றிய அரசு வழங்கியது.

இதனை தொடர்ந்து திட்டம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளுடன் கொள்கை அளவிலான ஒப்புதலுக்காக டிட்கோ விண்ணப்பித்திருந்தது. இதனை ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாகவும் பிப்ரவரி மாதத்திற்குள் கொள்கை அளவில் ஒப்புதல் கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த அனுமதி கிடைத்த உடனே கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான டெண்டர் பணிகளை டிட்கோ மேற்கொள்ளும். இதனிடையே ஒன்றிய அரசின் சுற்றுசூழல் மற்றும் பாதுகாப்பு அனுமதிக்காக சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு மற்றும் மேலாண்மை திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகளும் வேகமெடுத்து உள்ளன.

The post பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு பிப்ரவரிக்குள் கொள்கை ஒப்புதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: