கும்பமேளா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அசைவ உணவு, மதுவுக்கு தடை: உபி போலீஸ் அதிகாரி தகவல்

பிரயாக்ராஜ்: உபி மாநிலம் பிரயாக்ராஜில் வரும் ஜனவரி 13ம் தேதி மகா கும்பமேளா தொடங்குகிறது. பிப்ரவரி 26ம் தேதி வரை நடக்கும் கும்பமேளாவில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கங்கை நதியில் புனித நீராடுவார்கள். மகா கும்பமேளாவை ஒட்டி பிரயாக்ராஜ்க்கு வரும் பக்தர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் நம்பிக்கையின் சேவகர்களாக செயல்படும் விதமாக உபி போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மூத்த போலீஸ் எஸ்பி ராஜேஷ் திவேதி கூறுகையில்,‘‘ கும்பமேளாவுக்காக போலீசாருக்கு 21 நாள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில்,1,500 பேர் பயிற்சியை முடித்துள்ளனர். கும்பமேளா தொடங்கும் முன் 40,000 போலீசார் பயிற்சியை முடித்து விடுவார்கள். மகா கும்பமேளாவின் புனிதத்தை காக்க அசைவ உணவுகள் மற்றும் மதுபானங்கள் தொடர்பாக கடுமையான விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. கடைகளில் அசைவ உணவுகள், மதுபானங்கள் அனுமதிக்கப்படாது. பயிற்சியை மேற்கொள்ளும் போலீசாருக்கு முற்றிலும் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும்’’ என்றார்.

The post கும்பமேளா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அசைவ உணவு, மதுவுக்கு தடை: உபி போலீஸ் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: