இந்த நிலையில் கடந்த 18ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. 18ம் தேதி அன்று தங்கம் விலை சவரன் ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,960க்கு விற்பனையானது. 19ம் தேதி சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,520க்கும், 20ம் தேதி சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,920 ஆகவும், 21ம் தேதி சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,160 ஆகவும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,225க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,800க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்தது.
நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,300க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,400க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக நேற்றுடன் சேர்த்து, 6 நாட்களில் தங்கம் விலை ரூ.2,920 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. வரும் நாட்களில் திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் நகை விலை உயர்ந்து வருவது பெற்றோர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
The post தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் ஒரே நாளில் ரூ.600 எகிறியது: சவரன் ரூ.58 ஆயிரத்தை மீண்டும் தாண்டியதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி appeared first on Dinakaran.