சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்வு: நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி..!

சென்னை: சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் விலை ஏற்றம், நகை வாங்கத் திட்டமிட்டுள்ள இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று சென்னையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் சந்தை நிலவரங்களால் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்று தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணமே அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதுதான். அதனால் டாலர் மதிப்பு வலுவிழந்து, தங்கம் மீது முதலீட்டாளர்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.

நேற்றைய தினம் (மார்ச்.27) தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,07,440க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,430க்கு விற்பனையானது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (மார்ச்.28) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,660க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோ ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: