8 பெண்கள், 5 குழந்தைகள் உட்பட 50 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்த 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஷியா சமூகத்தை சேர்ந்தவர்கள். தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் தீவிரவாதிகளின் வாகனங்கள் பதுங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. மாகாண முதல்வர் அலி அமீன் கான் கந்தாபூர் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் 50 பேர் பலி, 20 பேர் காயம் appeared first on Dinakaran.