இதனால் உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வௌியாகின. இதைத்தொடர்ந்து அமெரிக்கா, இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனில் இருந்த தங்கள் நாட்டு தூதரகங்களை நேற்று முன்தினம் மூடின. போர் தொடங்கி 1000 நாள்கள் கடந்துள்ள நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வீசி நேற்று தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து உக்ரைன் விமானப்படை வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ரஷ்யாவின் காஸ்பியன் கடல் எல்லையான அஸ்ட்ராகான் பகுதியில் இருந்து உக்ரைனின் டினிப்ரோ நகரை குறி வைத்து ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. மேலும் எட்டு ஏவுகணைகளை வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவின் 6 ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post உக்ரைன் மீது ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை வீசி தாக்குதல்: 1000 நாள்களில் முதன்முறை appeared first on Dinakaran.