இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக சென்னை ஐ.ஐ.டி.க்கு ரூ.2 கோடியே 8 லட்சத்து 67 ஆயிரமும், பெங்களூரு ஐ.ஐ.எம்.க்கு ரூ.1 கோடியே 50 லட்சத்து 65 ஆயிரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி நிறுவனங்களுக்கு தேவையான பணி ஆணையை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் வழங்கி, ஒத்துழைப்பு நல்குவார்கள். விரைவில் ஆய்வை முடித்து, ஓராண்டுக்குள் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்த சுற்றுலா சீஷன் (2025 ஏப்ரல்) தொடங்குவதற்கு முன் மலைவாசஸ்தலங்களின் சுமந்து செல்லும் திறன் குறித்த தோராயமான மதிப்பீட்டை வழங்க வேண்டும்.
The post ஊட்டி, கொடைக்கானலில் எவ்வளவு வாகனங்களை அனுமதிப்பது? ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய ரூ.3.50 கோடி ஒதுக்கீடு: அரசு உத்தரவு appeared first on Dinakaran.