அரசு பணியாளருக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வலியுறுத்தல்

சென்னை: அரசு பணியாளருக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கேட்டுக் கொண்டார். மனிதவள மேலாண்மை துறை மற்றும் முன்னாள் படை வீரர்கள் நலன் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மனிதவள மேலாண்மை துறை குறித்த அறிவிப்புகள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து கடந்த 19ம் தேதி தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில், மனிதவள மேலாண்மை துறையின் பணிகளான அரசு துறைகளின் நிர்வாகம் மற்றும் தேவைகேற்ப அரசு பணியாளர்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே கணித்தல், மனித வளம் தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகள், விதிகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுதல், அவற்றை தொடர்ச்சியாக கண்காணித்தல், அரசு பணிக்கான உரிய நபர்களை தேர்ந்தெடுத்தல், பயிற்சி அளித்தல் ஆகிய திட்டங்கள் குறித்து அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அரசு பணியாளருக்கான திட்டங்களை நல்ல முறையில் விரைந்து செயல்படுத்திடுமாறு அறிவுரைகள் வழங்கினார். ஆய்வு கூட்டத்தில் மனிதவள மேலாண்மை துறை செயலாளர் .சமயமூர்த்தி, பயிற்சி துறை தலைவர் அரசு கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் கபூர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்ந்த காவல் துறை தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post அரசு பணியாளருக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: