அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக குட்டையில் குதித்து நீரில் மூழ்கிய சிறுவர்களை மீட்டு உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறுவர்கள் 2 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவர்கள் 2 பேரும் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர் இதனால். சிறுவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறிய சோக சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருத்தணி போலீசார் குட்டையில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகேசன் என்பவரின் 2 ஆண் குழந்தைகளில் மூத்த மகனும், அவரது தம்பி ஆறுமுகத்துக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகன் குட்டையில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
The post கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.