உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த ஆள்வராம்பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கடந்த 2 நாட்களும் புண்யாவாசனம், வாஸ்துஹோமம், சாந்தி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து நேற்று காலை மூன்றாம் கால யாக வேள்வி பூஜை முடிந்தபின் மேளதாளங்கள் முழுங்க வாணவேடிக்கைகளுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு வேத மந்திரங்கள் ஓத கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஆள்வராம்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
The post உத்திரமேரூர் அருகே அகத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.