குட்கா விற்ற டீ கடைக்கு சீல்: உரிமையாளர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே சின்னப்பன் (68) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த டீக்கடையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதாக செங்கல்பட்டு நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் செங்கல்பட்டு நகர போலீசார் சின்னப்பனின் டீக்கடையில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல், ஜர்தா, எம்‌.டி.எம், ஸ்வாகத் மற்றும் சைனி என மொத்தம் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் டீக்கடைக்கு செங்கல்பட்டு நகர காவல் ஆய்வாளர் லட்சுமிபதி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சட்டநாதன் ஆகியோர் சீல் வைத்தனர். மேலும், குட்கா பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post குட்கா விற்ற டீ கடைக்கு சீல்: உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: