குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவி சத்தியவதி. ஓசூர் கோர்ட்டில் வக்கீலாக பணி புரிந்த இவர், ஓசூர் அண்ணா சிலை அருகே மூத்த வக்கீல் ஒருவரிடம், ஜூனியராக பணியாற்றி வந்துள்ளார். கோர்ட்டில் அடிக்கடி வக்கீல் சத்தியவதியை சந்திக்கும் வக்கீல் கண்ணன், அவரிடம் பேசி வந்துள்ளார்.
நாளடைவில் கண்ணன், சத்தியவதியிடம் செல்போனில் தவறாக பேசுதல், அத்துமீறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனை தனது கணவர் ஆனந்தகுமாரிடம், சத்தியவதி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தகுமார், வக்கீல் கண்ணனை கண்டித்துள்ளார். மேலும், இதுபற்றி போலீசிலும் புகார் கொடுத்துள்ளார். அப்புகார் குறித்து வக்கீல்கள் அமந்து பேசி சமரசம் செய்துள்ளனர். ஆனால், சமரசத்திற்கு பிறகும், வக்கீல் கண்ணன், சத்தியவதிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது கணவரிடம் அவர் மீண்டும் தெரிவித்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்து அரிவாளால் வெட்டி தள்ளினேன் என ஆனந்தகுமார் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கண்ணனை வெட்ட கணவர் ஆனந்தகுமாரை தூண்டி விட்டதாக, வக்கீல் சத்தியவதியையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஆனந்தகுமாரை சேலம் மத்திய சிறையிலும், சத்தியவதியை பெண்கள் கிளைச்சிறையிலும் அடைத்தனர். நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து, பல மாவட்டங்களில் வக்கீல்கள் நேற்று நீதிமன்றங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
The post ஓசூர் கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞரை கொல்ல முயற்சி பெண் வக்கீல், கணவர் கைது: வெட்டியது ஏன்? திடுக் வாக்குமூலம் appeared first on Dinakaran.