திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சம்பா, தாளடி நடவு பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை

திருக்காட்டுப்பள்ளி : திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சம்பா, தாளடி நடவு பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.பூதலூர் வட்டாரத்தில் பல்வேறு பகுகுதிகளில் ஒரு சில பகுதிகளில் நடவு பணி முடிந்துவிட்டது. ஒரு சில இடங்களில் நடவு பணிக்காக வயல்களில் வரப்பு சீர் செய்யும் பணியும், உழவு பணியும் நடைபெற்று வருகிறது.

அதேபோன்று வரகூர், கண்டமங்களம், கழுமங்களம், கலர் பட்டி,போன்ற கிராமப்பகுதிகளில் தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி தற்போது வடிய தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஒருவாரமாக இப்பகுதியில் சம்பா தாளடி நடவு பணி நடைபெற்று வருகிறது.

மும்முரமாக நடவு பணி நடைபெற்று வரும் வேலையில் நடவு நடுவதற்கு உள்ளூர் ஆட்கள் ஆண்கள், பெண்கள் யாரும் வேலைக்கு வருவது இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து நாற்று பறித்து வயலில் நாற்றை விளம்பி அதன் பிறகு நடவு பணி மேற்கொள்ள தஞ்சை மாவட்ட பகுதிகள் ஒரத்தநாடு, பாப்பா நாடு, வெட்டிக்காடு, கந்தர்வக்கோட்டை ஆரிய பகுதிகளிலிருந்து ஆண்கள், பெண்கள் என தினமும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட டாட்டா ஏ ஈ.சி வாகனம், டூரிஸ்ட் வேன் இலைகளில் வந்து நாற்று பறித்து வயலில் நாற்றை விளம்பி நட்டு தருகின்றனர். ஒரு ஏக்கருக்கு ரூ.5,600 முதல் ரூ.6000 வரை கூலியாக பெறுகின்றனர்.

இதனால் விவசாயிகளுக்கு எவ்வித சிரமும் இல்லை என்றும் எங்களுக்கு வேலை முடிந்தால் நல்லது என்றும் கூலியை பற்றி கவலை இல்லை உள்ளூரில் அனைத்து வேலைகளையும் செய்ய ஆட்கள் இருந்தும் வேலைக்கு வராமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் வெளியூரிலிருந்து வந்து அனைத்து வேலைகளையும் செய்து தருவதால் விவசாயிகளாகிய எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்று தெரிவிக்கின்றனர்.

The post திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சம்பா, தாளடி நடவு பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை appeared first on Dinakaran.

Related Stories: