இதனால் மாலை மற்றும் இரவு வேலைகளில் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அனுமதியின்றி கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் தரமும் சரியாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, பொதுமக்கள் இத்தகைய தற்காலிக கடைகள் மூலம் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். தற்காலிக கடைகளை அவற்றின் உரிமையளர்கள் அப்புறப்படுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாவண்ணம் நடக்க வேண்டும். அகற்றப்படாத கடைகள் போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தி, பொது ஏலத்தில் விடப்படும். மேலும், கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post கிருஷ்ணகிரி நகரில் சாலையோர கடைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை: நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.